வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

இனி youtube இல் download செய்ய எந்த software இன் உதவியும் தேவையில்லை


இனி youtube இல் இருந்து ஏதாவது வீடியோ song, Film, etc download செய்ய வேண்டுமென்றால் எந்த software இன் உதவியும் தேவையில்லை .
நீங்கள் Download செய்யப் போகும் பாடலின் தள முகவரியில் (web address) ok என்று Type செய்து Enter பண்ணி விட்டால் அது தானாக எங்கு save செய்வது என்று கேக்கும் அதை ok செய்து விட்டால் உடனே download ஆகும்
உதாரணமாக ….
வேட்டைக்காரன் பட பாடலை Download செய்வதற்கு…….
அந்த பாடலை பார்ப்பதற்கு
http://www.youtube.com/watch?v=t6SoLpUe7fo&feature=related
அதனை Download செய்வதற்கு…….
அதன் Address இல் Ok என்று Type செய்யவும்

Ex:- http://www.okyoutube.com/watch?v=t6SoLpUe7fo&feature=related

 

நன்றி….
கசன்
தகவல் - tamilalagan.com
 
குறிப்பு  - இந்த முறையில் தரவிறக்கும்  வீடியோ கோப்புக்கள் 
விண்டோஸ் மீடியா பிளேயரில் தெரியாது ,இதனால் எல்லா வீடியோ
கோப்புகளையும் தடை இன்றி திறக்க கூடியதான VLC Media Player   
நிறுவிக்கொள்ள வேண்டும் . 

இந்த சுட்டிக்கு சென்று உங்கள் கணினி இயங்குதளத்திற்கு ஏற்ற விஎல்சி மீடியா ப்ளேயரை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.


புதன், 27 ஜனவரி, 2010

இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு உள்ளார்

இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச 
வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

இத்தேர்தலில் மஹிந்த ராஜபக்பச  60 லட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகள்பெற்றுள்ளார். இது சுமார் 57.88 சதவீதமாகும்.  இவரை எதிர்த்து  போட்டியிட்ட  பொன்சேகாவுக்கு 41 லட்சத்து 73 ஆயிரத்து 185 வாக்குகள்
கிடைத்துள்ளன,இது 40.15 சதவீதமாகும்.  சுயேட்சையாக போட்டியிட்ட
 சிவாஜிலிங்கத்திற்கு சுமார் 9662 வாக்குகள்  மட்டுமே கிடைத்தது.
 இது சதவீத அடிப்படையில் 0.09 ஆகும்.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் 10,495,451 .செல்லுபடியான மொத்த
வாக்குகள் 10,393,613. மகிந்த ராஜபக்ச  6,015,934  வாக்குகளை பெற்றுள்ளார் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகா 4,173,185  வாக்குகளைப் பெற்றுள்ளார்.மகிந்த ராஜபக்ச  1,842,749  அதிகப்படியான வாக்குகள்
 பெற்று பெருவெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் சம்பந்தமான உத்தியோக பூர்வ முடிவுகளை இலங்கை தேர்தல்
திணைக்களத்தின்  இணையத்தளத்தில் பார்வையிட இங்கே கிளிக் பண்ணவும் .

மாவட்ட ரீதியான தேர்தல் முடிவுகளை  கீழே  பார்வையிடலாம்

யாழ்ப்பாணம்
சரத் பொன்சேகா 113,877
மகிந்த ராஜபக்ச   44,154
மட்டக்களப்பு
சரத் பொன்சேகா 146,057
மகிந்த ராஜபக்ச 55,663
திகாமடுல்ல (அம்பாறை)
சரத் பொன்சேகா 153,105
மகிந்த ராஜபக்ச   146,912
வன்னி
சரத் பொன்சேகா 70,367
மகிந்த ராஜபக்ச 28740
திருகோணமலை
சரத் பொன்சேகா 87,661
மகிந்த ராஜபக்ச 69,752
நுவரேலியா
சரத் பொன்சேகா 180,604
மகிந்த ராஜபக்ச 151,604
கொழும்பு
மகிந்த ராஜபக்ச   614,740
சரத் பொன்சோகா 533,022
கம்பஹா
மகிந்த ராஜபக்ச 718,716
சரத் பொன்சேகா 434,506
காலி
மகிந்த ராஜபக்ச 386,971
சரத் பொன்சேகா 211,633
மாத்தறை
மகிந்த ராஜபக்ச 296,155
சரத் பொன்சேகா 148,510
அம்பாந்தோட்டை
மகிந்த ராஜபக்ச 226,887
சரத் பொன்சேகா 105,336
குருநாகல்
மகிந்த ராஜபக்ச 582,784
சரத் பொன்சேகா 327,594
அநுராதபுரம்
மகிந்த ராஜபக்ச 298,448
சரத் பொன்சேகா 143,761
பதுளை
மகிந்த ராஜபக்ச 237,579
சரத் பொன்சேகா 198,835
இரத்தினபுரி
மகிந்த ராஜபக்ச 377,734
சரத் பொன்சேகா 203,566
களுத்துறை
மகிந்த ராஜபக்ச 412,562
சரத் பொன்சேகா 231,807
கண்டி
மகிந்த ராஜபக்ச 406,636
சரத் பொன்சேகா 329,492
கேகாலை
மகிந்த ராஜபக்ச 296,639
சரத் பொன்சேகா 174,877
புத்தளம்
மகிந்த ராஜபக்ச 201,981
சரத் பொன்சேகா 136,233
மாத்தளை
மகிந்த ராஜபக்ச 157,953
சரத் பொன்சேகா 100,513
பொலநறுவை
மகிந்த ராஜபக்ச 144,889
சரத் பொன்சேகா 75,026
மொனறாகலை
மகிந்த ராஜபக்ச 158,435
சரத் பொன்சேகா 66,803

சனி, 23 ஜனவரி, 2010

தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட AVATAR திரைப்படம்

தமிழ் மொழியில் மொழி  மாற்றம் செய்யப்பட்ட AVATAR
திரைப்படம் வெளியாகி  உள்ளது . இதனை கூடுதலாக 
அனைவரும் பார்த்திருப்பார்கள் எனினும் இதுவரை பார்க்காதவர்கள் இங்கே பார்த்துக்கொள்ளலாம் 


         
                    நன்றி - tubeindian .com

செவ்வாய், 19 ஜனவரி, 2010

ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சிகளை நேரடியாக இணையத்தில் பார்க்கலாம்

ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சிகளான
GTV ,  Deepam TV , Kalaignar TV , Cee (i) TV , Dan TV ஆகிய
தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிபரப்புக்களை
இணையத்தினூடாக நேரடியாக பார்க்க கூடியதாக உள்ளது .

நேரடியாக பார்க்க விருப்புபவர்கள் இங்கே கிளிக் பண்ணவும்
Fullscreen இல் பார்பதற்கு வீடியோ இன் மேல் Double Click
பண்ணவும் .

கீழே உள்ள தொலைக்காட்சிகளின் சின்னங்களின் மேல் கிளிக்
பண்ணுவதன் மூலம் அந்தந்த தொலைக்காட்சிகளை பார்க்க
முடியும் .











நன்றி -tubekolly.com 


கீழே உங்களின் கருத்துக்களை தெரிவித்து விட்டு செல்லவும் 

புதன், 13 ஜனவரி, 2010

முத்தரப்பு தொடரில் சாம்பியனானது இலங்கை அணி


அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

முத்தரப்பு கிரிக்கெட் தொடர் பைனலில் இன்று (13/01/2010)
இந்திய இலங்கை அணிகள் மோதின, இதில் இலங்கை அணி
இந்தியாவை நான்கு விக்கற்றுகளினால் வெற்றி ஈட்டி சம்பியன்
கிண்ணத்தை பெற்றுக்கொண்டது . இன்றைய போட்டியில்
நாணயசுழச்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி
முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது

துடுப்பாட்டத்தை தொடங்கிய இந்திய அணி முதலில்
மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது
இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சியாக இருந்தது.
முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே காம்பிர்,
"டக் அவுட்டானார்'. கடந்த போட்டிகளில் அசத்தலாக
ரன்குவித்த, இளம் வீரர் கோஹ்லி (2) இம்முறை அணியை
கைவிட்டார். யுவராஜ், ரன் எதுவும் எடுக்காமல்
பெவிலியன் திரும்பினார்.


ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்தாலும்,
சேவக் தன் அதிரடியை நிறுத்தவில்லை. கேப்டன்
தோனியும் (14) விரைவில் வெளியேற சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் 42 ரன்கள் சேர்த்திருந்த சேவக்கும் அவுட்டாக,
இந்திய அணி 60 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை
இழந்து திணறத்துவங்கியது.


பின்னர் சோடி சேர்த்த ரைனா மற்றும் ரவிந்திர ஜடேஜா
ஆறாவது விக்கட்ருக்காக தமக்கிடையே 106 ஓட்டங்களை
142
பந்துகளை எதிர்கொண்டு பெற்று இந்திய அணியை

மோசமான நிலையில் இருந்து மீட்டனர் ,ரவிந்திர ஜடேஜா 38,
அவுட்டானார் தொடந்து சிறப்பாக ஆடிய ரைனா சதம் அடித்தார்
அவர் 115 பந்துகளை எதிர்கொண்டு 106 ஓட்டங்களை
பெற்றுகொண்டார் , ஆட்ட முடிவில் இந்திய அணி 48.2 ஓவர்களில்
அனைத்து விக்கற்றுகளையும் இழந்து 245 ரன்களை
பெற்றுக்கொண்டது .

இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் குலசேகர நான்கு ,
வெலகெதர மூன்று , மற்றும் ரண்டிவ் ,பெரேரா ,தில்ஷன்
ஆகியோர் தலா ஒரு இலக்குகளையும் பெற்றுக்கொண்டனர்,
இலங்கை சார்பாக உதிரிகளாக பத்து ரன்கள் கொடுக்கப்பட்டது .

இலங்கை அணியானது 48.3 ஓவர்களில் ஆறு
இலக்குகளை இழந்து 249 ஓட்டங்களை பெற்று
நான்கு இலக்குகளினால் வெற்றி ஈட்டியது ,இலங்கை
அணி சார்பாக தில்ஷன் 49 , சங்கக்கார 55 , ஜெயவர்த்தன
ஆட்டமிழக்காது 71 ஆகிய ஓட்டங்கள் பெறப்பட்டன .


இந்தியா சார்பாக உதிரிகளாக ஆறு ஓட்டங்கள்
கொடுக்கப்பட்டது , பந்து வீச்சில் ஹர்பஜன் 2 , யுவராஜ் 1 ,
ஜடேஜா 1 ,நெஹ்ற 1 ஆகியோர் இலக்குகளினை பெற்றனர்.
நேற்று தனது 2வது ஓவரின் 3வது பந்தை "நோ-பாலாக' வீசிய
நெஹ்ராவுக்கு இடுப்பு பகுதியில் பிடிப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து இவரால் பந்துவீச முடியவில்லை. இதையடுத்து
எஞ்சிய நான்கு பந்துகளை விராத் கோஹ்லி வீசினார்.
இவருக்கு பதில் ரோகித் சர்மா பீல்டிங் செய்தார்.
முன்னணி பவுலரான நெஹ்ரா காயம் காரணமாக 1.2 ஓவர்
மட்டுமே வீச முடிந்தது, இந்திய அணிக்கு பெரும்
வினையாக அமைந்தது.




ஆட்டநாயகனாக இலங்கை அணியின் குலசேகர
தெரிவு செய்யபட்டார் இவர் நான்கு இலக்குகளினை
வீழ்த்தி இருந்தார் , இது அவரது ஒருநாள் போட்டி வரலாற்றில்
முதலாவது ஆட்டநாயகன் விருது என்பது குறிப்பிடத்தக்கது .
தொடர் நாயகன் விருதை இலங்கை கேப்டன் சங்ககரா வென்றார்.

* சேவக் நேற்று 6வது ரன் எடுத்த போது ஒரு நாள்
போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களை(213 இன்னிங்ஸ்)
எட்டினார். இதன் மூலம் இந்த மைல்கல்லை விரைவாக
எட்டிய நான்காவது இந்திய பேட்ஸ்மேன் என்ற
பெருமை பெற்றார். இதற்கு முன் கங்குலி(174 இன்னிங்ஸ்),
சச்சின்(189), டிராவிட்(204), யுவராஜ்(215), அசார்(233)
ஆகியோர் 7 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.


* குலசேகரா பந்தில் சேவக் கொடுத்த "கேட்ச்சை' பிடித்த
போது, ஒரு நாள் அரங்கில் 301வது விக்கெட் வீழ்ச்சிக்கு
காரணமான கீப்பர் என்ற பெருமையை சங்ககரா பெற்றார்.
இவர் இதுவரை 235 "கேட்ச்', 66 "ஸ்டம்பிங்' செய்துள்ளார்



மீண்டும் இன்னுமோர் ஸ்கோர் விபரங்களுடன் சந்திப்போம்
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க மறக்காதீர்கள்