புதன், 13 ஜனவரி, 2010

முத்தரப்பு தொடரில் சாம்பியனானது இலங்கை அணி


அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

முத்தரப்பு கிரிக்கெட் தொடர் பைனலில் இன்று (13/01/2010)
இந்திய இலங்கை அணிகள் மோதின, இதில் இலங்கை அணி
இந்தியாவை நான்கு விக்கற்றுகளினால் வெற்றி ஈட்டி சம்பியன்
கிண்ணத்தை பெற்றுக்கொண்டது . இன்றைய போட்டியில்
நாணயசுழச்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி
முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது

துடுப்பாட்டத்தை தொடங்கிய இந்திய அணி முதலில்
மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது
இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சியாக இருந்தது.
முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே காம்பிர்,
"டக் அவுட்டானார்'. கடந்த போட்டிகளில் அசத்தலாக
ரன்குவித்த, இளம் வீரர் கோஹ்லி (2) இம்முறை அணியை
கைவிட்டார். யுவராஜ், ரன் எதுவும் எடுக்காமல்
பெவிலியன் திரும்பினார்.


ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்தாலும்,
சேவக் தன் அதிரடியை நிறுத்தவில்லை. கேப்டன்
தோனியும் (14) விரைவில் வெளியேற சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் 42 ரன்கள் சேர்த்திருந்த சேவக்கும் அவுட்டாக,
இந்திய அணி 60 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை
இழந்து திணறத்துவங்கியது.


பின்னர் சோடி சேர்த்த ரைனா மற்றும் ரவிந்திர ஜடேஜா
ஆறாவது விக்கட்ருக்காக தமக்கிடையே 106 ஓட்டங்களை
142
பந்துகளை எதிர்கொண்டு பெற்று இந்திய அணியை

மோசமான நிலையில் இருந்து மீட்டனர் ,ரவிந்திர ஜடேஜா 38,
அவுட்டானார் தொடந்து சிறப்பாக ஆடிய ரைனா சதம் அடித்தார்
அவர் 115 பந்துகளை எதிர்கொண்டு 106 ஓட்டங்களை
பெற்றுகொண்டார் , ஆட்ட முடிவில் இந்திய அணி 48.2 ஓவர்களில்
அனைத்து விக்கற்றுகளையும் இழந்து 245 ரன்களை
பெற்றுக்கொண்டது .

இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் குலசேகர நான்கு ,
வெலகெதர மூன்று , மற்றும் ரண்டிவ் ,பெரேரா ,தில்ஷன்
ஆகியோர் தலா ஒரு இலக்குகளையும் பெற்றுக்கொண்டனர்,
இலங்கை சார்பாக உதிரிகளாக பத்து ரன்கள் கொடுக்கப்பட்டது .

இலங்கை அணியானது 48.3 ஓவர்களில் ஆறு
இலக்குகளை இழந்து 249 ஓட்டங்களை பெற்று
நான்கு இலக்குகளினால் வெற்றி ஈட்டியது ,இலங்கை
அணி சார்பாக தில்ஷன் 49 , சங்கக்கார 55 , ஜெயவர்த்தன
ஆட்டமிழக்காது 71 ஆகிய ஓட்டங்கள் பெறப்பட்டன .


இந்தியா சார்பாக உதிரிகளாக ஆறு ஓட்டங்கள்
கொடுக்கப்பட்டது , பந்து வீச்சில் ஹர்பஜன் 2 , யுவராஜ் 1 ,
ஜடேஜா 1 ,நெஹ்ற 1 ஆகியோர் இலக்குகளினை பெற்றனர்.
நேற்று தனது 2வது ஓவரின் 3வது பந்தை "நோ-பாலாக' வீசிய
நெஹ்ராவுக்கு இடுப்பு பகுதியில் பிடிப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து இவரால் பந்துவீச முடியவில்லை. இதையடுத்து
எஞ்சிய நான்கு பந்துகளை விராத் கோஹ்லி வீசினார்.
இவருக்கு பதில் ரோகித் சர்மா பீல்டிங் செய்தார்.
முன்னணி பவுலரான நெஹ்ரா காயம் காரணமாக 1.2 ஓவர்
மட்டுமே வீச முடிந்தது, இந்திய அணிக்கு பெரும்
வினையாக அமைந்தது.




ஆட்டநாயகனாக இலங்கை அணியின் குலசேகர
தெரிவு செய்யபட்டார் இவர் நான்கு இலக்குகளினை
வீழ்த்தி இருந்தார் , இது அவரது ஒருநாள் போட்டி வரலாற்றில்
முதலாவது ஆட்டநாயகன் விருது என்பது குறிப்பிடத்தக்கது .
தொடர் நாயகன் விருதை இலங்கை கேப்டன் சங்ககரா வென்றார்.

* சேவக் நேற்று 6வது ரன் எடுத்த போது ஒரு நாள்
போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களை(213 இன்னிங்ஸ்)
எட்டினார். இதன் மூலம் இந்த மைல்கல்லை விரைவாக
எட்டிய நான்காவது இந்திய பேட்ஸ்மேன் என்ற
பெருமை பெற்றார். இதற்கு முன் கங்குலி(174 இன்னிங்ஸ்),
சச்சின்(189), டிராவிட்(204), யுவராஜ்(215), அசார்(233)
ஆகியோர் 7 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.


* குலசேகரா பந்தில் சேவக் கொடுத்த "கேட்ச்சை' பிடித்த
போது, ஒரு நாள் அரங்கில் 301வது விக்கெட் வீழ்ச்சிக்கு
காரணமான கீப்பர் என்ற பெருமையை சங்ககரா பெற்றார்.
இவர் இதுவரை 235 "கேட்ச்', 66 "ஸ்டம்பிங்' செய்துள்ளார்



மீண்டும் இன்னுமோர் ஸ்கோர் விபரங்களுடன் சந்திப்போம்
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க மறக்காதீர்கள்

2 கருத்துகள்: