ஞாயிறு, 27 டிசம்பர், 2009

மோசமான ஆடுகளம் காரணமாக ஐந்தாவது ஒருநாள் போட்டி ரத்து



27/12/2009 இன்று டில்லியில் நடைபெற்ற இந்திய இலங்கை
அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான
ஒருநாள் போட்டி மோசமான ஆடுகளம் காரணமாக
கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது .

போட்டி ரத்து செய்யப்பட்டதால் ஏற்கனவே நடைபெற்ற
நான்கு போட்டிகளின் அடிப்படியில் 3-1 என்று இந்திய அணி
முன்னிலையில் இருந்ததினால் வெற்றிக்கிண்ணத்தினை
இந்திய அணி பெற்றுக்கொண்டது .

நாணய சுழச்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர்
டோனி இலங்கை அணியை துடுப்பெடுத்தாட பணித்தார்
இதன்படி துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி
23.3 ஓவர்களில் ஐந்து விக்கற்றுக்களை இழந்து 83
ஓட்டங்களை பெற்ற நிலையில், மோசமான ஆடுகளம்
காரணமாக பந்துகள் வீரர்களை தாக்கும் வைகையிலும்
பவுன்சராகவும் வருவதனால் தொடந்து விளையாட
இலங்கை அணித்தலைவர் குமார்சங்கக்கார எதிர்ப்பு
தெரிவித்தார், இதையடுத்து ஆடுகளத்துக்கு வந்து
விவாதித்த போட்டி நடுவர் போட்டி ரத்து செய்யப்படுவதாக
அறிவித்தார் .

இலங்கை அணியின் வீரர் தில்ஷன் காயமடைந்தார்
என்பதும் குறிப்பிடத்தக்கது



மீண்டும் அடுத்த வருடம் ஜனவரி நான்காம் திகதி
ஆரம்பமாகும் இலங்கை இந்திய பங்களாதேஷ்
அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள்
போட்டியின் score விபரங்களுடன் சந்திப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக