ஆம் இந்திய இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று
(24/12/2009) நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில்,
இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம், ஐந்து போட்டிகள்
கொண்ட தொடரில் 3:1 என்று இந்திய அணி முன்னிலை
பெற்றுள்ளதால் தொடரை கைப்பற்றி உள்ளது .
நாணய சுழச்சியில் வெற்றி பெற்ற இலங்கை
அணித்தலைவர் குமார் சங்கக்கார துடுப்பாட்டத்தை
தெரிவு செய்தார், இலங்கை அணியில் நான்கு
மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன, கடந்த
போட்டியில் விளையாடிய Kapugedera, Mendis, Welegedera,
Kulasekara ஆகியோர் நீக்கப்பட்டு இவர்களுக்கு பதிலாக
Jejasuriya, Perera, Samaraweera, Lakmal ஆகியோர்
சேர்க்கப்பட்டு இருந்தனர்
இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி
50 ஓவர்கள் முடிவில் 6 விக்கற்றுக்களை இழந்து
315 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது, இலங்கை அணி
சார்பாக Tharanka சதத்தினை பெற்றுக்கொண்டார்
அவர் 118 ஓடங்களை 128 பந்துகளை எதிர் கொண்டு பெற்றார் .
மற்றும் கூடுதலாக Sangakkara 60, Jayawardene 33,
Perera 31, பெற்றுக்கொண்டனர், மீண்டும் சேர்க்கப்பட்ட
ஜெயசூரிய 15 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டார்
என்பது குறிப்பிடத்தக்கது, உதிரிகளாக 13 ஓட்டங்கள் கிடைத்தது.
இந்திய அணி சார்பாக பந்து வீச்சில் Z Khan பத்து ஓவர்கள்
பந்து வீசி 49 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து இரண்டு
விக்கற்றும், Nehra ஒன்பது ஓவர்கள் பந்து வீசி 68 ஓட்டங்களை
கொடுத்து இரண்டு விக்கற்றும், Habhajan ஒரு விக்கற்றும்
பெற்றுக்கொண்டனர் .
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பத்தில்
Sehwag மற்றும் Tendulkar இன் விக்கற்றுக்களை சொற்ப
ஓட்டங்களுக்கு இழந்த போதும், பின்னர் சோடி சேர்ந்த
Gambhir மற்றும் V Kohli இன் சதத்தின் மூலமாக
48.1 ஓவர்களில் மூன்று விக்கற்றுக்களை இழந்து
317 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி ஈட்டியது .
இந்திய அணி சார்பாக V Kohli 107 ஓடங்களை
114 பந்துகளிலும், Gambhir ஆட்டமிழக்காது 150 ஓடங்கள்
137 பந்துகளில் பெற்று கொண்டார், இதில் அவர் 14 நான்கு
ஓடங்களை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது ,
மற்றும் Karthik ஆட்டமிழக்காது 19 ஓட்டங்களை
பெற்றுக்கொண்டார், உதிரிகளாக இலங்கை அணி
சார்பாக 23 ஓட்டங்கள் கொடுக்கப்பட்டது .
இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் Lakmal, Randiv
ஆகியோர் முறையே இரண்டு ,ஒன்று விக்கற்றுக்களை
வீழ்த்தினர் , மற்றவர்கள் எந்தவொரு விக்கற்றும்
வீழ்த்தவில்லை
இதன் மூலம் இந்த போட்டியில் இந்திய அணி ஏழு
விக்கற்றுக்களினால் வெற்றி பெற்றுக்கொண்டது ,
ஆட்ட நாயகனாக ஆட்டமிழக்காது 150 ஓட்டங்களை
பெற்றுக்கொண்ட Gambhir தெரிவு செய்யப்பட்டார்.
ஐந்தாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 27 ஆம்
திகதி Delhi இல் பகல் போட்டியாக நடைபெறும்,
இந்த போட்டி இலங்கை இந்திய நேரப்படி காலை 9.00
மணிக்கும் ஐரோப்பிய நேரப்படி அதி காலை 4.30
மணிக்கும் ஆரம்பமாகும் , இந்த போட்டியை
இணையத்தினூடாக பார்க்க விரும்புபவர்கள் ,
இங்கே www.crictime.com கிளிக் பண்ணவும் .
மீண்டும் அடுத்த போட்டியின் முடிவுகளுடன்
சந்திப்போம், பிடித்திருந்தால் வாக்களிக்க மறக்காதீர்கள்
சந்திப்போம், பிடித்திருந்தால் வாக்களிக்க மறக்காதீர்கள்
thanks for your information
பதிலளிநீக்குthankes pirathap
பதிலளிநீக்குthanks pirathap
பதிலளிநீக்கு